சேலம் மாவட்டம், தேவூர் எனும் கிராமத்தில் ஒரு பிரபலமான செல் வந்தர் குடும்பத்தில் 30.09.1909ல் பிறந்தவர் டாக்டர் அண்ணாஜி. பள்ளி மாணவராக இருந்தபோதே 1930ம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட் டத்தில் பங்கெடுத்தார். இதனால் பிரிட்டிஷ் காவல் துறையின் கொடிய தாக்குதலுக்கும், ஒரு வருட சிறை தண்டனைக்கும் ஆளானார்.